யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழா
![]()
யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
4 ஆம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா கொண்டாட்டம்
மாணவர்கள், பேராசிரியர்கள் விருது வழங்கி கவுரவிப்பு
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 4 ஆம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழாவான சாதனையாளர்களை கொண்டாடும் யுகாஸ் 26 விழா நடைபெற்றது. இதில் கல்லூரி அளவில் பல துறைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சிறப்பாகச் செயலாற்றிய பேராசிரியர்களுக்கும் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து சினிமா மற்றும் தொலைக்காட்சி புகழ் கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள யுனைடெட் கல்வி நிறுவனங்களின் ஓர் அங்கமான யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 4 ஆம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழாவான சாதனையாளர்களை கொண்டாடும் யுகாஸ் 26 விழா கல்லூரியின் சரஸ்வதி அரங்கு மற்றும் மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யுனைடெட் கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் பொறியாளர் எஸ் சண்முகம் தலைமையேற்று உரையாற்றினார். யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆ.விஜயா கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து ஆண்டறிக்கையினை வாசித்தார். யுனைடெட் கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் முனைவர் சி ஏ எம் கைலாஷ்குமார், செயலாளர் அருண்கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக புகழ்பெற்ற சின்னதிரை நட்சத்திரம் பிரனிகா தக்சு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகளை தம் வாழ்க்கை அனுபவங்கள் வழி எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
கல்லூரி அளவிலே பல துறைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், சிறப்பாகச் செயலாற்றிய பேராசிரியர்களுக்கும் பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து மாலை கலைநிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக விஜய் தொலைகாட்சி மற்றும் சன் தொலைகாட்சிகளின் புகழ்மிக்க பாடகர்களான ஸ்ரீதர் சேனா, ரெஹானா, ஆதனா ஸ்ரீ, நகைச்சுவை பேச்சாளர்களான சுட்டி அரவிந்த், அசார், சின்னதிரை நட்சத்திரம் பிரனிகா தக்சு, டி.ஜே யோகராஜ் மற்றும் டி.ஜே வால்சன் வேல் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்ட கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வினை மனோஜ்குமார் தொகுத்து வழங்கினார்.

