மக்கள்குறைதீர் கூட்டங்கள் சிறப்பு முகாம்கள் நிறுத்தம்

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மற்ற இதர குறைதீர் கூட்டங்கள், ஏனைய சிறப்பு முகாம்கள் நிறுத்திவைப்பு : மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் மார்ச் 16 : இந்திய தேர்தல் ஆணையத்தினால் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி வாரம் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர்  மு.பிரதாப் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மற்ற இதர குறைதீர் கூட்டங்கள், ஏனைய சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் தங்களுக்கு அவசரமான கோரிக்கை ஏதும் இருப்பின் அதுகுறித்த மனுக்களை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களின் முன்புற வாசலில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெறும் பெட்டியில் செலுத்துமாறு திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares