பெட்டியில் மனுக்களைபோடநடவடிக்கை

Loading

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து : நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை போட நடவடிக்கை :

திருவள்ளூர் மார்ச் 16 : தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனால் பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து கோரிக்கை மனுக்களை செலுத்த ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் கோரிக்கை மக்களை பொதுமக்கள் செலுத்தி விட்டு செல்கின்றனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் கொடுக்கும் மனுக்கள் மீது எடுப்பதே பெரிய சவாலாக உள்ள நிலையில் பெட்டியில் போடப்படும் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
0Shares