துணைராணுவம் மற்றும் போலீசார்கள் அணிவகுப்பு

Loading

சட்டமன்றத் தேர்தல்  நெருங்குவதை  முன்னிட்டு மாவட்ட எஸ்பி தலைமையில் துணை ராணுவம் மற்றும் போலீசார்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பு அணிவகுப்பு நடைபெற்றது*  பகலில் நடத்தவேண்டிய அணிவகுப்பு இரவில் நடந்தது.
உளுந்தூர்பேட்டை. மார்ச் 14,
சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும்   பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வகையிலும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில்  கள்ளக்குறிச்சி மாவட்டம் ,
உளுந்தூர்பேட்டையில் மாவட்ட எஸ்பி அரவிந்தன் அவரது தலைமையில் Adsp சரவணன், உளுந்தூர்பேட்டை உட்கோட்டை டிஎஸ்பி அசோகன் துணை இராணுவ வீரர்கள் ,
இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம்,  சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர் , பிரித்தா, உள்ளிட்ட போலீஸார்கள்  பாதுகாப்பு அணிவகுப்பு நடைபெற்றது.
 இந்த அணிவகுப்பு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தொடங்கி பேருந்து நிலையம் ,திருவெண்ணைநல்லூர் செல்லும், சாலை, காயித மில் தெரு, செங்குந்தர் தெரு ,
ஈஸ்வரன் கோயில் தெரு , போஸ் ஆபீஸ் தெரு,சென்னை- திருச்சி, சேலம் தேசிய நெடுஞ்சாலை என முக்கிய சாலை மற்றும் தெருவின் வழியாக அணிவகுப்பு சென்று மீண்டும் காவல் நிலையம் வந்தடைந்தனர்.
இந்த அணிவகுப்பில்,
மாவட்ட எஸ்பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, துணை ராணுவ அதிகாரிகள்
உளுந்தூர்பேட்டை
எடைக்கல், எலவனாசர் கோட்டை, திருநாவலூர், களமருதூர் ஆகிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்ட்கர்கள், தலைமை காவலர்கள், முதல் நிலை காவலர்கள், மற்றும் போலீசார்கள்  174 பேர் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுப்பு நடத்தினர்.
இந்த அணிவகுப்பானது பட்டப் பகலில் நடைபெற்றால் கிராமப்புற பகுதியில் இருந்து நகரத்திற்கு வந்து செல்பவர்களுக்கு அதிகாலை விழுப்புரம் ஏற்படுத்தியிருக்கும்.
இரவு நேரம் என்பதால் அவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அளவிற்கு இல்லை.
————–
சட்டமன்றத் தேர்தல்  நெருங்குவதை  முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் மாவட்ட எஸ்பி அரவிந்தன் அவரது தலைமையில் துணை ராணுவம் மற்றும் போலீசார்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பு அணிவகுப்பு நடைபெற்றபோது எடுத்த படம்.
0Shares