டாடாபாத் பகுதியில், நடைபெற்ற கன்டன ஆர்ப்பாட்டம்

Loading

கோவை
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக கோவை சிவானந்தா காலனி டாடாபாத் பகுதியில், நடைபெற்ற கன்டன ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசை வலியுறுத்தி கன்டன முழக்கங்களை எழுப்பினர்.
தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து , கோவை சிவானந்தா காலனி டாடாபாத் பகுதியில், கன்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இக்கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் சக்தி வேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தை, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணை தலைவரும் வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களிலும் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 3500 வரை, பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் எனவும், தாட்கோ அலுவலகம் மூலம் எஸ்.சி மற்றும் எஸ்டி மக்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காலதாமதம் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றே முக்கால் கோடி தேவேந்திர குல வேளாளர் வேளாளர் சமூக மக்களை, எஸ்.சி பட்டியலில் இருந்து பிசி அல்லது எம்.பி.சி பட்டியில் சேர்க்கப்பட வேண்டும் எனவும், கோவை செல்வபுரத்தில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தில், நடைபெறும் முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதில் தகுதியானவர்களுக்கு உடனடியாக அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், கோவை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசின் மூலம் பட்டா வழங்கப்பட்டுள்ளது ஆனால், இன்று வரை அதற்கான இடத்தை அளவீடு செய்து தரப்படவில்லை எனவும், அவர்களுக்கு உடனுக்குடன் அவர்களது இடங்களை அளவீடு செய்து தரவேண்டும், கோவை நீதிமன்ற வளாகம் முன்பு சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவருக்கு முழு வெண்கல சிலை அமைத்து தரப்பட வேண்டும், கோவை மாவட்டம் வடக்கு தாலுகா நம்பர் 24 வீரபாண்டி கிராமத்தில், புறம்போக்கு இடங்கள் அதிக அளவில் உள்ளது இங்கு பொது மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும் என்பது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  கன்டன முழக்கங்களை எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்,
வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் லட்சுமி, பத்மா, செல்வராஜ், அமல் ராஜ், பால்ராஜ், அந்தியூர் காமராஜ், பரமேஸ்வரன், வீரன், தேசிய மக்கள் கட்சி சக்தி சார்பாக தனசேகரன், துடியலூர் உலகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares