நெகிழிஇல்லாதிருவள்ளூர்மாவட்டம்மீண்டும்மஞ்சப்பை
![]()
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் “நெகிழி இல்லா திருவள்ளூர் மாவட்டம்” (ம) “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தில் நெகிழி பொருட்கள் சோதனைச் சாவடி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் திறந்து வைத்தார் :
திருவள்ளூர் மார்ச் 13 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அடிவாரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் “நெகிழி இல்லா திருவள்ளூர் மாவட்டம்” (ம) “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தில் திருக்கோவில் வளாகத்தை நெகிழி இல்லா வளாகமாக மாற்றும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள நெகிழி பொருட்கள் சோதனைச் சாவடியை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் திறந்து வைத்து, 1000 பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.
மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், பொதுமக்களிடம் நெகிழி ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடி நெகிழி இல்லா திருத்தணியாக மாற்றிட வேண்டுமென கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் கடைகளுக்கு துணிப்பைகள் மற்றும் பாத்திரங்களைக் கொண்டுச் சென்று காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு பொருட்களை பெற வேண்டும் இவ்வாறு நாம் நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் நெகிழி பயன்பாடுகள் படிப்படியாக குறைந்து முற்றிலும் நெகிழி இல்லா சூழ்நிலை ஏற்பட்டு சுற்றுச்சூழல் சீர்கேடு இல்லாமல் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதில் திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் சுப்பையா,திருவள்ளூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வ இளவரசி, திருத்தணி நகராட்சி ஆணையர் கன்னியப்பன் மற்றும் பல்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

