கோவையில் கேஸ் பங்க் முற்றுகை
![]()
கோவை
மற்ற கேஸ் பங்க்குகளை விட 1லிட்டருக்கு 20ரூபாய்க்கும் மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும், கோவை கேஎன்ஜி புதூர் கோ கேஸ் நிறுவனம்! பங்க்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய கால் டேக்ஸி, மற்றும் ஆட்டோ ஒட்டுநர்களால் பரபரப்பு..
கோவை தடாகம் சாலை, கேஎன்ஜி புதூர் பகுதியில் கோ கேஸ் நிறுவனத்திற்க்கு சொந்தமான பங்க் இயங்கி வருகிறது. இப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான டேக்ஸி ஒட்டுநர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள் இங்கு தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பி வருகின்றனர். தற்பொழுது வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, தமிழகத்தில் சிலிண்டர் எரிவாயு தட்டுபாடு ஏற்படும் நிலை உள்ளது என்ற செய்தி அறிந்ததும், இந்த கேஸ் நிறுவனம் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், விலையை உயர்த்தியுள்ளனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், மற்ற பங்க்குகளில் இன்றைக்கும் ஆட்டோ எல்பிஜி ஒரு லிட்டர் விலை 64.87-க்கு விற்பனையாகும் நிலையில் இங்கு மட்டும் 84.99 க்கு விற்பனை செய்யப்படுகின்றதுமற்ற பங்க்குகளை விட 20 ரூபாய்க்கும் மேல் லிட்டருக்கு கூடுதலாக விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் நிர்வாகத்திடம் கேட்ட பொழுது நிர்வாகம் இஸ்டம் இருந்தால் அடியுங்கள், இல்லைஎன்றால் வெளியே செல்லுங்கள் என அலட்சியமாக கூறியுள்ளது
இதனால் ஆத்திரமடைந்த கால் டாக்ஸி ஓட்டுனர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் கேஸ் பங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கூறியதாவது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரே நாளில் 20 ரூபாய்க்கு மேல் லிட்டருக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் இதுகுறித்து கேள்வி எழுப்பினால் எந்தவித முறையான பதில்களையும் தெரிவிப்பதில்லை விலை உயர்வுக்கான அறிவிப்பு பலகையையும் எங்கும் வைக்கவில்லை மற்ற பங்குகளில் 64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பொழுது இங்கு மட்டும் எப்படி விலை 84 ரூபாய்க்கு விற்கப்படும் என்று கேள்வி எழுப்பினர் எனவே தமிழக அரசு உடன் உரிய நடவடிக்கை எடுத்து கால் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை சீரமைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர் இதனால் இங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

