கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியால் வெடிகுண்டு பீதி

Loading

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நீண்ட நேரம் கேட்பாரற்று கிடந்த மர்ம கருப்பு பெட்டியால் வெடிகுண்டு பீதி : விரைந்து வந்து சோதனை செய்த நிலையில் ஏதும் இல்லை தெரியவந்ததும் பெருமூச்சு விட்ட போலீசார் :
திருவள்ளூர் மார்ச் 13 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலின் முன் பகுதியில் சுற்றுச்சுவர் ஓரமாக மர்ம பெட்டி ஒன்று நீண்ட நேரமாகியும் கேட்பாரற்று கிடந்துள்ளது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, ஆட்சியர் அலுவலகம் முன்பு கேட்பாரற்று சந்தேகப்படும் படியாக கிடந்த கருப்பு பெட்டியில் வெடிகுண்டாக இருக்குமோ என பீதி அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனே திருவள்ளூர் நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்து அந்த கருப்பு பெட்டியை லாவகமாக சோதனை செய்து திறந்தனர்.
அப்போது, அந்த கருப்பு பெட்டியில் ஒன்றுமில்லாமல் வெறும் பெட்டியாக இருந்தது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து அந்த கருப்பு பெட்டியை சோதனை செய்தபோது அதில் வெடிகுண்டு இருப்பதற்கான எவ்விதமான அறிகுறியும் இல்லை. அதையடுத்து போலீசார் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் தீவிரமாக விசாரணை செய்ததில் அந்த கருப்புப்பெட்டி வங்கி ஏடிஎம் மையங்களில் பயன்படுத்தப்படும் கருப்பு பெட்டி என தெரிய வந்தது. இந்த நிலையில் மர்ம நபர்கள் யாரேனும் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்துவிட்டு பெட்டியை இங்கு வந்து வீசிவிட்டு சென்றார்களா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் அந்த கருப்பு பெட்டியை பாதுகாப்பாக எடுத்துச் சென்று ஆய்வுக்காக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த மர்ம பெட்டியால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
0Shares