இந்திய இராணுவத்தில்2027-ஆம் ஆண்டிற்கான பணியிடங்கள்

Loading

இந்திய இராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் 2027-ஆம் ஆண்டிற்கான பணியிடங்கள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

திருவள்ளூர் மார்ச் 12 : இந்திய இராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் திருமணமாகாத (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் மண்டல மத்திய பிரிவினருக்கு 2027-ஆம் ஆண்டிற்கான Agniveer General Duty, Agniveer Technical, Agniveer Clerk / Store Keeper, Technical, Agniveer Tradesmen (10th and 8th Pass), Agniveer Women Military Police, Soldier NA/NA_VET, Sepoy Pharma ஆகிய பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பிற்கான அறிவிப்பு www.joinindianarmy.nic.in வலைதளத்தில் 13.02.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவு 13.02.2026 முதல் தொடங்கி 01.04.2026 அன்று முடிவடையும். அக்னிவீர் தேர்வர்கள் தங்கள் தகுதியின் அடிப்படையில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். CEE தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும் மற்றும் ITI/Diploma மற்றும் NCC தகுதி பெற்றவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 2027 – ஆம் ஆண்டிற்கான மேற்படி இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு செய்யப்படும் பணியிடங்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை என்னென்னவென்று முறையாக அறிந்து அதற்கு ஏற்றார் போல் வருகின்ற 01.04.2026-க்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares