ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Loading

திருவள்ளூர் அருகே ஏரியில் மண் குவாரி அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் :
திருவள்ளூர் மார்ச் 11 : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சித்தம்பாக்கம் பகுதியில் 200 ஏக்கர் அளவில் பொதுப்பணிக்கு சொந்தமான ஏரியில் இருந்து கடந்த 2024-2025 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சாலை பணிக்காக எல்.என்.டி நிறுவனம் சார்பில் மண் குவாரி எடுத்து சவுடு மண் அள்ளி சென்றனர்.
இதனால் ஏரி சுற்றி வட்டார பகுதியில் உள்ள நிலத்தடி நீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும், கால்நடைகளும் தண்ணீர் இன்றி தவித்து வருவதால் கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் கிடைக்காமல் விவசாயம்  பொய்த்து போனது. மேலும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி உள்ளதால் குடிப்பதற்கு கூட முறையான தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதால் ஏரியில் மீண்டும் சவுடு மண் குவாரிக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனக்கூறி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் அளிக்க வந்தனர்.
தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்ப அட்டை , வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு ஆவணங்கள் ஒப்படைக்கும் போராட்டம் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு சென்று மண் குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் மீறி அளித்தால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரித்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
0Shares