சென்னைபத்திரிகையாளர்கூட்டுறவுவீட்டுவசதிசங்கம்

Loading

சென்னை

சென்னைப் பத்திரிகையாளர் கூட்டுறவு வீட்டு வசதிச் சங்கம் என்ற ஒரு அமைப்பை துவக்கி அதன் மூலமாக மட்டுமே இனிவரும் காலங்களில் பத்திரிகையாளர்கள் குடியிருப்பு வீடுகள் மற்றும் வீட்டு மனைகள் பெற வேண்டுமென்ற ஒரு எழுதப்படாத சட்டத்தை உருவாக்கிய பின்பு அந்த அமைப்பை பயன்படுத்தி அப்போதைக்கு பெரிய நிறுவனங்களில் மாதம் கணிசமான தொகையை சம்பளமாக வாங்கும், நாளிதழ்களில் பணியாற்றிய சிலர் தங்களுக்கு வீடுகள் பெறும் வரையில் இந்த அமைப்பை கட்டிக்காத்து வந்தனர். அதன் பிறகு இந்த தலைமுறை பத்திரிகையாளர்கள் யாருக்கும் இப்படி ஒரு அமைப்பு இருப்பது கூட தெரிய வாய்ப்பில்லை இந்த வாசகத்தை படிக்கும்போது தான் இதைப்பற்றி தங்களுக்கு எல்லாம் தெரிந்த மாதிரி முதுகெலும்பில்லாத சில மூத்த பத்திரிகையாளர்கள் பேசவும் வாய்ப்புள்ளது. இந்த சங்கம் ஏன் துவங்கப்பட்டது. எதற்காக செயல்பட்டது என முழுமையாக தெரிந்தால் இனிவரும் காலங்களில் இந்த அமைப்பின் பரிந்துரை இல்லாமல் பத்திரிகையாளர் யாரும் வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக வீடு பெற முடியாது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு வீட்டு வசதித் துறைக்கு எஸ்.திருநாவுக்கரசு அமைச்சராக இருந்த காலத்தில். அப்போது எம்.யூ.ஜே.யின் பொதுச் செயலாளராக இருந்த எஸ். ராமசாமி ஒரு கடிதத்தை அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசுவுக்கு அனுப்பினார்.

பத்திரிகையாளர் காலனியை உருவாக்க 20 கிரவுண்டு நிலப்பரப்பை ஒதுக்கித் தருமாறும் அவர் கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். ஆர்.ஏ.புரம், திருவான்மியூர், கிண்டி, ஷெனாய்
நகர் போன்றவற்றில் ஏதேனும் ஒரு பகுதியில் நிலம் ஒதுக்கித்தரும்படியும் அவர் இடங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறாக அடுத்தடுத்து பலகட்டங்களில் இப்பணிகள் நடந்தன. சீஃப் புரமோட்டர் என்ற தகுதி ஆர்.ரங்கரஜூக்கு வழங்கப்பட்டது. கூட்டுறவுச் சங்க விதிகளின் பேரில் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்ட ஆர்.ரங்கராஜ், இந்தத் திட்டத்தைச் சாத்தியப்படுத்தினார். இதற்கு எம்.யூ.ஜே, மெட்ராஸ் ரிப்போர்டர்ஸ் கில்டு ஆகியவை மட்டுமின்றி அகில இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகளும் ரங்கராஜுக்கு உதவி புரிந்தனர்.

மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக “சென்னைப் பத்திரிகையாளர் கூட்டுறவு வீட்டு வசதிச் சங்கம்” உருவானது. இதற்காக 5.5 ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்பட்டது. தமிழக அரசு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாகவே இந்த நிலப்பரப்பு திருவான்மியூர், சீனிவாசபுரத்தில் ஒதுக்கித் தரப்பட்டது.

திமுக ஆட்சிக் காலத்தில் தான் இந்த நிலம் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டது. இதனை, முதல்வர் கலைஞர் கருணாநிதிதான் அரசு ஆணை வெளியிட்டு சாத்தியமாக்கித் தந்தார். இதற்கான விழாவைக் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்திருந்த போது அந்த விழாவுக்கு முதல்வர் கருணாநிதியும் வந்திருந்தார். வரும்போதே நிலப்பரப்பை ஒதுக்கீடு செய்து, அதனைத் தமிழக அரசு கெஜட் எனும் அரசிதழ்ப் பதிவு ஏட்டில் பதிப்பித்து விட்டார். அதன் நகலுடன் அவர் விழாவுக்கு வந்து அதைக் காட்டியே பத்திரிகையாளர்களிடம் பேசினார். நிலத்தைப் பெற்று அதனைக் கட்டுமானத்துக்கு உரியதாக்க முனைந்தபோது, அதனைச் சமப்படுத்த ரூ.20 லட்சம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டது. அந்தத் தகவல் முதல் அமைச்சர் கலைஞருக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தொகையை அரசின் மானியமாக வழங்கி, அவர் உத்தர விட்டார்.

கட்டிடத்தைக் கட்ட உரிய அரசு அனுமதிகள் பெறப்பட்டன. கட்டுமானத்தைத் தொடங்கி இருந்த தருணத்தில் தமிழகத்தில் 1991ல் சட்டசபைப் பொதுத் தேர்தல் நடந்தது. அதிமுக வெற்றி பெற்று, ஜெயலலிதா முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கட்டுமானத் திட்டம் குறித்து ஜெயலலிதாவிடம் தெரிவித்தபோது, அவரும் தன் பங்குக்குத் தமிழக அரசிடம் இருந்து ரூ.51 லட்சத்து 80 ஆயிரம் மானியமாக வழங்கி ஆணை பிறப்பித்தார்.

மீண்டும் இந்த அமைப்பின் வழியே பத்திரிகை துறையினர் பலனடைய வேண்டுமென்பது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

மேலும் விரிவான செய்திகளை அடுத்து வரும் செய்திகளில் தெரிவிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள் https://seidhialasal.in/  செய்தி அலசல் வெப்சைட்டில்

ச.விமலேஷ்வரன்
பத்திரிகையாளர்

0Shares