சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசவர் கைது
![]()
திருவள்ளூர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் :
திருவள்ளூர் மார்ச் 11 : திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக சென்னை தீவிரவாத தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 3 மணியளவில் வேப்பம்பட்டு பகுதியில் வீடு, வீடாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு தங்கியிருந்த கொத்தனார் வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த வாஸிம் அக்ரம், 24. எம்டி மசரூல், 20, ஆகிய இருவரை கைது செய்தனர். இருவரையும் செவ்வாப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இருவரும் முறையான அனுமதியின்றி பெங்களூர் மற்றும் சென்னையில் பணிபுரிந்து வந்தது தெரிய வந்ததுள்ளதென போலீசார் தெரிவித்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செவ்வாப்பேட்டை போலீசார் இருவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

