கோவையில் நடிகர் விமல் பேட்டி

Loading

த.வெ.க, தலைவர் விஜயின் ரசிகர் தான் என்றும் அவருடன் அரசியலில் இணைந்து செல்வது குறித்து காலம் தான் தீர்மானிக்கும் என நடிகர் விமல் கோவையில் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் ராஜசேகர் தயாரிப்பில் இயக்குனர் கேந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விமல்,நட்டி சுப்பிரமணியம், சனக்‌ஷா ஸ்ரீ, பால சரவணன், முனீஸ்கான், ஆகிய பிரபலங்கள் நடிப்பில் உருவாகி உள்ள் வடம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இசையமைப்பாளர் D.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கிராமங்களிலும் மாடுபிடி வீரர்கள் மாட்டின் உரிமையாளர்கள் என பலரது மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்பட குழுவினர்களான இயக்குனர் கேந்திரன், நடிகர் விமல், நடிகை சனக்‌ஷா ஸ்ரீ, உள்ளிட்டோர் கோவை ப்ரூக்பீல்ட் மாலில் உள்ள பிவிஆர் திரையரங்கிற்கு வருகை புரிந்து ரசிகர்களை சந்தித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்தும் படத்தின் வரவேற்பு குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் விமல் இந்த படத்தை வெற்றி படமாக மாற்றிய தமிழக ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் மாடு வளர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் இந்தபடத்தில் வரும் மாட்டின் உண்மையான  பெயர் சோழன் என்றும் அதிகமாக இனிப்புகளை உட்கொள்வார் வாழைப்பழங்களை உட்கொள்வார் என்று கூறிய அவர் இந்த திரைப்படத்தில் மாட்டிற்கும் மிக முக்கியமான பங்கு உள்ளது என தெரிவித்தார். இந்தப் படத்தில் நான் எங்கும் கஷ்டப்பட்டு நடிக்கவில்லை இஷ்டப்பட்டு தான் நடித்தேன் என்று கூறினார். அரசியல் தொடர்பான கேள்விக்கு அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால் நான் ஒரு விஜய் ரசிகர் என்றும் கில்லி படத்தில் அவருடன் இணைந்து பணிபுரிந்துள்ளேன் என தெரிவித்தார். விஜய் கில்லியில் எப்படி இருந்தாரோ அதுபோன்றுதான் தற்பொழுதும் அனைவரிடமும் அன்பாக பழகி வருகிறார் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் அவருடைய அரசியல் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார். விஜயுடன் இணைந்து செல்வீர்களா என்ற கேள்விக்கு அது காலம் தான் தீர்மானிக்கும் என்று பதிலளித்தார். நடிகர் விமல் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு தற்போதைக்கு நான் படங்களை நடிக்க வேண்டும் என்றுதான் இருக்கிறேன் அரசியலில் நல்லது செய்பவர்கள் அனைவருடனும் இணைந்து துணையாக இருப்பேன் என பதில் அளித்தார்.
0Shares