பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம், 

Loading

கோவை
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள, தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் உலக குளுக்கோமா வார்த்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்,
கண் மருத்துவ சேவையில் முன்னணி வகிக்கும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 8ம் தேதி முதல் 14ம் தேதிவரை பல்வேறு விழிப்புணர்வு மற்றும் இலவச கண் பரிசோதனை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.
தென்னிந்தியாவில் 27 கிளைகளை கொண்டு கடந்த 46 ஆண்டுகளாக சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வரும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, சார்பாக, பொதுமக்கள் அனைவரும் கண் பார்வையை பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற குறிக்கோளை முன்வைத்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் குளுக்கோமா பிரிவு ஆலோசகருமான டாக்டர் சித்ரா ராமமூர்த்தி, டாக்டர் ஆர். முரளிதர், டாக்டர் ஐமன் அகமது கான் மற்றும் டாக்டர் நிரஞ்சனா பாலசுப்ரமணியம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.. குளுக்கோமா பாதிப்பு,
உலகளவில் 76 மில்லியன் மக்கள் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2.1 மில்லியன் பேர் முழுமையான பார்வை இழப்பை சந்தித்துள்ளதுடன், 4.2 மில்லியன் பேர் கடுமையான பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 40 வயதுக்கு மேற்பட்ட சுமார் 12 மில்லியன் மக்கள் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் பார்வையற்றோரில் சுமார் 12.8 சதவீதமாகும். பார்வை இழப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் குளுக்கோமா மூன்றாவது இடத்தில் இருப்பதால், இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிகவும் அவசியமானதாகும் என தெரிவித்தனர். மேலும், உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 8ம் தேதி முதல் 14ம்  வரை தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் குளுக்கோமா நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை வழங்கப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு 10 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. இதற்குடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு இடங்களில் இலவச கண் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படுகின்றதாக தெரிவித்தனர்.
0Shares