பொதுமக்களிடம் இருந்து 500 கோரிக்கை மனுக்கள்

Loading

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 500 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :
திருவள்ளூர் மார்ச் 11 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 500 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 48 மனுக்களும், கலைஞர் மகளிர் உரிமை தொகை சம்பந்தமாக 63 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 63 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 48 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 27 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 251  மனுக்கள் என ஆக மொத்தம் 500 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ்  மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் வெங்கடேசன், உதவி ஆணையர் (கலால்) கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா ராணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், துணை ஆட்சியர் பயிற்சி) செ.சண்முக பிரீத்தா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares