4 கிலோ கஞ்சா கண்ட்ரோல் ரூமுக்கு ரகசிய தகவல்
![]()
உளுந்தூர்பேட்டை காவல் நிலையம்
பேருந்தில் கஞ்சா நடத்திவந்த 2 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு. 4 கிலோ பறிமுதல்.
உளுந்தூர்பேட்டை. மார்ச் 10,
ஆந்திராவில் இருந்து 4 கிலோ கஞ்சா வாங்கிக்கொண்டு சென்னையில் இருந்து திருச்சி பேருந்தில் பயணம் செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ட்ரோல் ரூமுக்கு சில ரகசிய தகவலின்படி உளுந்தூர்பேட்டை உட்கோட்டை டிஎஸ்பி அசோகன் மேற்பார்வையில் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள் ராஜசேகர் , பிரீத்தா மற்றும் போலீசார்கள் நேற்று இரவு உளுந்தூர்பேட்டை- சேலம் ரவுண்டானா அருகே அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்த போது இரண்டு நபர்கள் கஞ்சாவுடன் கையும் களவுமாக பிடிபட்டனர்.
உடனே அவரை கைது செய்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து அவர்கள் வைத்திருந்த நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து அவர்கள் யார் எந்த ஊரைச் சார்ந்தவர் என்று போலீசார் விசாரணை செய்த போது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முருகன் பாளையம் குமார் நகர், வேல்முருகன் மகன் பாரதிராஜா வயசு 31, சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்த அன்பரசன் மகன் சிவபாலன் வயது 27 இவர் இருவரையும் கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.
உளுந்தூர்பேட்டை போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் புகைப்படம்.

