7 ம் வகுப்பு மாணவன் பலி 2 பேர் பலத்த காயம்

Loading

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம்  மீது லாரி மோதிய விபத்தில் 7 ம் வகுப்பு மாணவன் பலி : 2 பேர் பலத்த காயம் :

திருவள்ளூர் மார்ச் 09 : திருவள்ளூர் அடுத்த மெய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் இவரது மகன் யஷ்வந்த், (13). திருவள்ளூர்  அரசுநிதி உதவி பெறும் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக நின்று கொண்டருந்தார்.அப்போது அவ்வழியே வந்த அதே ஊரைச் சேர்ந்த ஆவடி  தனியார் கல்லுாரியில் படித்து வரும் ராஜ்பிரியன்(19). தனது நண்பர் ரிஷி(18) என்வருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

இதில் யஷ்வந்தை அவர்களது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மெய்யூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில் புதிய மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி இரு சக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் மூவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பள்ளி மாணவன் யஸ்வந்த் சிகிச்சை பலனின்றி பலியானார்.  மற்ற  2 பேரும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மெய்யூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0Shares