பிளஸ் டூ மாணவிக்குபாலியல்தொல்லை7 ஆண்டு சிறை

Loading

சென்னை எண்ணூர்

சென்னை எண்ணூரில் பிளஸ் டூ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு :

திருவள்ளூர் மார்ச் 08 : திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜா ( வயது 52).இவர் கூலி தொழிலாளியான இவர் கடந்த 19-10- 2019 அன்று ராஜா வீட்டிலிருந்தார். அப்போது அங்கு 16 வயது நிரம்பிய பிளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் மாடிக்கு சென்று உலர வைத்திருந்த  துணிகளை எடுப்பதற்காக சென்றுள்ளார்.அப்போது அங்கு யாரும் இல்லை என்பதை தெரிந்துக் கொண்ட ராஜா பின்தொடர்ந்து சென்று அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார்.

இதனால் பதறிப் போன அவர் அலறியடித்து கொண்டு அங்கிருந்து ஓடி வந்து நடந்தது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.போலீசார் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக புவனேஸ்வரி வாதாடினார்.
இந்த வழக்கில் 16 சாட்சிகள் மற்றும் மாணவியின் வாக்குமூலங்கள் அடிப்படையில் இன்று திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து குற்றவாளியான ராஜாவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 8 ஆயிரம் அபராதமும் விதித்தார்.அபராத தொகையை  செலுத்த தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.
0Shares