காரில் 4 மாடுகளை திருட முயன்ற இளைஞர் கைது

Loading

திருவள்ளூர் அடுத்த கீழ் நல்லாத்தூர் பகுதியில் ஸ்கார்பியோ காரில் 4 மாடுகளை திருட முயன்ற இளைஞர் கைது : தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர் :
திருவள்ளூர் மார்ச் 06 : திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் தன் வீட்டின் முன்பு வழக்கம் போல் 5 மாடுகளை கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் மாடுகள் கத்தும் சத்தம் கேட்டதால்  கமலக்கண்ணன் எழுந்து வெளியே வந்து பார்த்த போது மூன்று நபர்கள் ஸ்கார்பியோ காரில் ஒரு மாட்டை ஏற்றிக்கொண்டிருத்தந்தாகவும் சத்தம் போட்டதால் மாட்டுடன் மூன்று நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
இது குறித்து  கமலக்கண்ணன் மணவாள நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மாடுகளை திருட முயற்சித்த பாலவேடு பகுதியை சேர்ந்த சாரதி (19) என்பவரை மணவாள நகர் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இறைச்சி கடை உரிமையாளர் பாலவேடு பகுதியைச் சேர்ந்த வினோத்,சந்தோஷ் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
0Shares