ஈரோடு மாவட்ட 2030 தொலைநோக்கு திட்ட ஆவணம் வெளியீடு

Loading

ஈரோடு
ஈரோடு மாவட்ட 2030 தொலைநோக்கு திட்ட ஆவணம் வெளியீடு
ஈரோடு பரிமளம் மஹாலில் (06.03.2026) நடைபெற்ற விழாவில், வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு மாவட்டத்திற்கான “என் ஊர் என் கனவு – இலக்கு 2030” உத்திகள் மற்றும் செயல் திட்ட ஆவணத்தை வெளியிட்டார். கடந்த 30.01.2026 அன்று மக்கள் பிரதிநிதிகள், துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் ஈரோடு மாவட்டத்தின் கடந்த ஐந்தாண்டுகால சாதனைகள் குறித்த ஆவணத்தையும் அவர் வெளியிட்டார். தொடர்ந்து, கூட்டுறவுத் துறையின் சேவைகளை மக்கள் இருப்பிடத்திற்கே கொண்டு செல்லும் வகையில் ‘Erodecoop’ என்ற புதிய கைப்பேசி செயலியை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மருந்து பொருட்கள், வேளாண் கருவிகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை பொதுமக்கள் விரைவாகப் பெற முடியும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார், வெங்கடாச்சலம், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0Shares