வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனை
![]()
திருவள்ளூரில் அரசியல் பொதுக்கூட்டங்கள் கூடும் இடங்களை முன் அனுமதி பெறுவது மற்றும் அதற்கு உண்டான செலவினங்கள் மேற்கொள்ள வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் :
திருவள்ளூர் மார்ச் 06 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அரசியல் பொதுக்கூட்டங்கள் கூடும் இடங்களை முன் அனுமதி பெறுவது மற்றும் அதற்கு உண்டான செலவினங்கள் மேற்கொள்ள வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அரசியல் பொதுக்கூட்டங்கள் கூடும் இடங்களை முன் அனுமதி பெறுவது மற்றும் அதற்கு உண்டான செலவினங்கள் மேற்கொள்ள வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 முன்னிட்டு 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் (எனது இந்தியா எனது வாக்கு) மாவட்ட தேர்தல் சின்னத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வெளியிட்டார்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், காவல் துணை ஆணையாளர் பெரோஸ்கான் அப்துல்லா, (ஆவடி) பாலாஜி (செங்குன்றம் சட்ட ஒழுங்கு), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் (நில எடுப்பு) முனைவர் ஆனந்தகுமார், கவிதா,ஜெயராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) டீ.ஸ்ரீராம், 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

