உழைப்பாளர்நலக்கூடம்கு.பிச்சாண்டிதுவக்கிவைத்தார்
![]()
திருவண்ணாமலை
திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில்
கட்டுமான தொழிலாளர்களுக்கான
உழைப்பாளர் நலக்கூடம் சபாநாயகர் கு.பிச்சாண்டி குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்
திருவண்ணாமலை மார்ச்.5- திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கான உழைப்பாளர்கள் நலன் அடிப்படை வசதியும் தங்கும் அறை கூடத்தை சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடத்தை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு தொழிலாளர் நலவாரிய கண்காணிப்பு குழு உறுப்பினரும் தமிழ்நாடுஅனைத்து அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பிரச்சார செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராமபிரதீபன் முன்னிலை வகிக்க தொழிலாளர் உதவி ஆணையர் இரா.வேதநாயகி அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு அர்ப்பணித்த அவர் கட்டுமான தொழிலாளர்கள் மேஸ்திரி சித்தாள் பிளம்மர் எலெக்ட்ரிஷயன் மற்றும் உட்பிரிவு தொழிலாளர்களுக்கு தற்காலிக ஓய்வறையும் அவர்கள் பயன்படுத்தும் செல்போன் கருவிக்கு சார்ஜி ஆர்.ஒ.தண்ணீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தொழிலாளர்களுக்கு செய்து தரப்பட்டுள்ளது.
இதில் திமுக மாநகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் தொழிலாளர்களை வாழ்த்தி பேசினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அனைத்து அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள் நிர்வாகிககள் எஸ்.நிர்மலா பி.கோமதி எஸ்.நளினி ஆர்.காயத்திரி எஸ்.சுகுணா ஆர்.வெண்ணிலா கட்டுமான தொழிலாளர்கள் மத்திய சங்கம் பொறுப்பாளர் வாசு விருதுகள் அமைப்பு சாரா மற்றும் கட்டுமான நலச்சங்க மாநில பொதுச் செயலாளர் ரவி மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பிரதிநிதிகள் அரசு துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக (சமூகப்பாதுகாப்பு திட்டம்) கண்காணிப்பாளர் இரா.வடிவேலு நன்றி கூறினார்.

