இரண்டுவீடுகளின்பூட்டைஉடைத்து12 சவரன்கொள்ளை
![]()
திருவள்ளூர் அருகே இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 12 சவரன் நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது : 8 நகைகள் பறிமுதல் :
திருவள்ளூர் மார்ச் 02 : திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் அடுத்த போளிவாக்க்ம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 2 சவரன் தங்கம், 250 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளைபோனது. அதேபோல் இதே பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செங்குன்றம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மாயமானது தெரிய வந்தது.
இதுகுறித்து சுந்தர், முனுசாமி ஆகிய இருவரும் கொடுத்த புகாரின்பேரில் மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி கேமரா ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளைக் கொண்டு சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். ஏற்கனவே இவன் மீது திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் பெரிய வந்தது. கைது செய்யப்பட்ட சிலம்பரசனிடம் இருந்து எட்டு சவரன் நகைகளை பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

