ஓ.பி.எஸ்- ன்முடிவை எங்களால் ஜீரணிக்கமுடியவில்லை

Loading

நீலகிரி
ஓ.பி.எஸ்- ன் முடிவை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என ஓ.பி.எஸ் அணியின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் வழக்கறிஞர் மனோஜ் குமார் குன்னூரில் பேட்டி….
ஓ.பி.எஸ். திமுகவில் நேற்று  இணைந்த நிலையில் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது‌
ஓ.பி.எஸ். அணியில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமான உள்ளனர்‌
இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணியின்இளைஞர்,மற்றும் இளம் பெண்கள் பாசறை அணியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் மனோஜ் குமார்  செய்தியாளர்களை சந்தித்தார் அவர் கூறியதாவது
ஓ.பி.எஸ்-ன், முடிவை நாங்கள் தவறாக எண்ணவில்லை இருப்பினும் அதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை
ஓ.பி.எஸ். அணியில் தமிழ்நாடு முழுவதும் ஏராளமானவர் இருந்து வருகின்றனர் அவர்களுக்கு ஆதரவு குரல் இன்னும் எங்கிருந்தும் வரவில்லை.
அதிமுக கட்சியில் இருந்து கூட உங்களை ஏற்கிறோம் என்று இன்னும் எந்த ஒரு தகவலும் வரவில்லை இப்போது தலைவரே இல்லாமல் தொண்டர்கள் மட்டும் உள்ளோம். என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளோம்
மார்ச் 10-ஆம் தேதி  அனைத்து தொண்டர்களையும் இணைத்து ஒரு கூட்டம் கூட்டி கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுப்பது என்று முடிவு செய்ய உள்ளோம்
ஓ.பி.எஸ். அவர்கள் கடைசியாக வைத்த ஒரு கூட்டத்தில் நாம் யாரிடத்தில் சேரலாம் அதாவது      த.வெ.க அல்லது திமுகவா என கேட்டார் அதில் 11 மாவட்ட செயலாளர்கள் திமுக என்றனர்.ஆனால்நாங்களோ திமுக என்ற கேள்வி வைத்ததே தவறு என்று தெரிவித்தோம்.
ஆனால் அவரோ அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு கூட்டத்தையும் கூட்டாமல்  சென்று விட்டார்.
ஆதலால் விரைவில் கூட்டத்தைக் கூட்டி ஒரு முடிவு எடுக்க உள்ளோம்.என்று வழக்கறிஞர் மனோஜ்குமார் தெரிவித்தார்.
0Shares