வருவாய்த்துறையினர்3வதுநாள்காத்திருப்புபோராட்டம்
![]()
வருவாய்த்துறையினர் மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய் துறை சார்ந்த பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதி :
திருவள்ளூர் மார்ச் 01 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும்.
கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீதம் பங்களிப்பை ரத்து செய்திட வேண்டும், பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்ச வரம்பு 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 -வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வருவாய் துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் வருவாய் துறை சார்ந்த பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஊழியர்கள் இல்லாததால் நீதிமன்ற உத்தரவுகளை கூட நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாக அதிகாரிகளும் கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

