முதலமைச்சர்பல்வேறுதிட்டங்களை திறந்து வைத்தார்
![]()
தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக பல்வேறு துறைகள் சார்பில் திட்டங்களை திறந்து வைத்தார் :
திருவள்ளூர் பிப் 28 : தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மேனாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்வினை காணொளி காட்சி வாயிலாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டு பின் அனைவருடனும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ரூ.29.75 கோடி மதிப்பீட்டில் புதிய மலைப் பாதை அமைக்கும் பணிகளை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வினை காணொளி காட்சி வாயிலாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டு அடிக்கல் எடுத்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை எல்லை சாலை (பகுதி 2) திட்டத்தின் கீழ் ரூ.719 கோடி மதிப்பீட்டில் புன்னபாக்கம் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை வரை புதிய ஆறுவழிச்சாலை மற்றும் இருவழி சேவை சாலைகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அப்பகுதிக்கு நேரில் சென்று அவ்வழி தடத்தில் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சந்திரன் (திருத்தணி), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சு.ஸ்ரீதரன், திருக்கோவில் இணை ஆணையர் க.ரமணி, பொதுப்பணி துறை செயற்பொறியாளர் பி.தேவன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் என்.எம்.கனிமொழி, நெடுஞ்சாலைகள் துறை கோட்ட பொறியாளர்கள் சிற்றரசு, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, உஷாரவி, கோ.மோகனன், நாகன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன கண்காணிப்பு பொறியாளர் சி.எ.திலகவதி, கோட்ட பொறியாளர் பி.சங்கர், உதவி கோட்ட பொறியாளர் என்.ரமேஷ்கண்ணா, உதவி பொறியாளர் எஸ்.தயானந்தன், தனியார் கட்டுமான நிறுவன பொது மேலாளர் இ.மோகன்ராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

