கோவை 25ஆண்டு பணியாற்றியவர்களுக்கு பாராட்டு

Loading

கோவை
கோவையில் தொடர்ந்து 42 ஆண்டுகாலம் மக்கள் சேவையாற்றும், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 42வது 
நிறுவனர் நாள் விழா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாட பட்டது.
கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 42-வது நிறுவனர் நாள் விழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை கடந்த 1970-ம் ஆண்டு, மறைந்த எஸ்.என். ரங்கசாமி நாயுடுவால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் கீழ் மருத்துவம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 18 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இதன் நிறுவனர் நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி 42-வது ஆண்டு நிறுவனர் நாள் விழா, கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து, எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆண்டறிக்கை வாசித்தனர்.
விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக ஏ.வி.எம். லேப்ஸ், ஏ.வி.எம். ஸ்மைல்ஸ் மற்றும் தைரோகேர் ஆகிய நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் ஏ. வேலுமணி கலந்து கொண்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் என்று 25 ஆண்டுகள் நிறைவு செய்த 30 நபர்களைக் கௌரவித்து அவர்களுக்கு விருதுகள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, 400 – க்கும் மேற்பட்ட இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள டாக்டர் எஸ்.தியாகராஜமூர்த்தி அவர்களைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருதினையும் வழங்கிச் சிறப்பித்தார் இந்த
விழாவில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சௌந்தரராஜ், அறங்காவலர்கள்  ராமகிருஷ்ணா விஜயகுமார், லஷ்மிநாராயணஸ்வாமி துரைசாமி, தலைமை செயல் அதிகாரி சி.வி.ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டி.மகேஷ் குமார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல். சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0Shares