கஞ்சாவழக்கில் 4 வாலிபர்கள்கைது சிறையில்அடைப்பு
![]()
கஞ்சா வழக்கில் 4 வாலிபர்கள் கைது சிறையில் அடைப்பு. 650 கிராம் கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்த பயன்படுத்தி இருசக்கர வாகனம் பறிமுதல்.
உளுந்தூர்பேட்டை. பிப் 28,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசார் க்கு கிடைத்த ரகசிய தகவலின் படி உளுந்தூர்பேட்டை உட்கோட்டை டிஎஸ்பி அசோகன் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையில் மற்றும் போலீசார்கள் M. குன்னத்தூர் மலை அருகே வாகன ரோந்து பணியில் இருக்கும் போது நான்கு வாலிபர்கள் இரண்டு இரு சக்கர வாகனத்தில் கஞ்சாவை ஆளுக்கு கொஞ்சமாக பிரித்துக் கொண்டிருந்தபோது போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
போலீசாரின் சோதனையில் கஞ்சா என தெரிய வந்ததும் நான்கு நபர்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து கஞ்சா விற்பனை செய்யும் இவர்கள் யார் எந்த ஊரைச் சார்ந்தவர் என்று போலீசார் விசாரணை மேற்கொண்ட போது
கஞ்சா விற்பனை செய்வதாக மலை அடிவாரத்தில் யாருக்கும் தெரியாமல் கஞ்சாவை ஆளுக்கு கொஞ்சமாக பிரித்துக் கொண்டதாகவும் அவர்கள் எம். குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் மகன் பிரகாஷ் வயது 25, அழகுவேல் மகன் அஜித் வயது 20,
திருக்கோவிலூர் தாலுகா பழங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் வசந்த் வயது 23, ஏழுமலை மகன்
திருமலை வயது 20, ஆகிய நான்கு வாலிபர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து 650 கிராம் மிக கொடிய போதையான கஞ்சா மற்றும் அதற்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் நான்கு நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்யப்பட்ட பிரகாஷ், அஜித், வசந்த், திருமலை புகைப்படம் மற்றும் கஞ்சா,

