விக்சித் பாரத் – ஜி ராம் ஜிகுடியரசுத் தலைவர்ஒப்புதல்
![]()
இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘விக்சித் பாரத் – ஜி ராம் ஜி’ (VB G – RAM G) மசோதா 2025, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்று அது தற்போது சட்டமாக மாறியுள்ளது.
‘விக்சித் பாரத் – கியாரன்டி ஃபார் ரோஸ்கர் அண்ட் அஜீவிகா மிஷன்’ (வளர்ந்த இந்தியா – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டம்) என்பது, ஐமுகூ (UPA) அரசு காலத்தில் செயல்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் (MNREGA) திட்டத்திற்குப் பதிலாக செயல்படுத்தப்பட்டு,
இந்தத் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு,125 நாட்கள் உறுதியான கூலி வேலை வழங்க உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம், ‘விக்சித் பாரத் 2047’ என்ற தேசிய பார்வைக்கு ஏற்ப, கிராமப்புற வளர்ச்சிக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது என்று அரசு தெரிவிக்கிறது. ஆனால் இந்த திட்டம் முற்றிலும் தவறானது என்றும் மீண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு என்று மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் அருகே மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த பெயர் மாற்றம் மற்றும் இந்த திட்டத்துக்கு முழு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியும் இதனை மத்திய அரசு விரைவில் திரும்ப பெற வில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று மாவட்ட தலைவர் நாகராஜ் கூறினார் இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் நாகராஜ் முன்னிலையில் காங்கிரஸ் வட்டார தலைவர்கள் சுப்புரமணி,பாலன்,சிலாம் பாபு, மற்றும் மாநில OBC அமைப்பு சதிஷ்குமார் (சந்திப்),லாரன்ஸ், தலைமையிலும் நடைபெற்றது. மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் தலைவி கோமதி, மாவட்ட மகளிர் அணி தலைவி பிரியா, மாவட்ட INTUC தலைவர் ஹிட்லர், குன்னூர் வட்டார பொறுப்பாளர் கமலா சீராளன்,குந்தா பேரூராட்சி தலைவர் நேரு, மாவட்ட காங்கிரஸ் செயலாளர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

