கருப்பனார், பெரியாண்டிச்சி அம்மன்” தெவத்திருவிழா

Loading

சேலம் சென்னகிரி கிராமம் நந்தவனகாட்டு, “கருப்பனார், பெரியாண்டிச்சி அம்மன்” தெவத்திருவிழா!
சேலம் மாவட்டம் சின்னகிரி கிராமம் நந்தவன காட்டில் அமைந்துள்ள, “கருப்பனார் பெரியாண்டிச்சி அம்மன்” தெவத்திருவிழா,
ஸ்ரீ விசுவாவசு வருடம் மாசி மாதம் 26 ம் நாள் திங்கள்கிழமை இரவு தைளியம்மன் கோவில் வீட்டில் இருந்து பூஜை கூடை புறப்பட்டு மறுநாள் மாசி மாதம் 12ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மாசி மாதம் 14ஆம் நாள் வியாழக்கிழமை இரவு தைரியம்மன் கோவில் வீட்டில் இருந்து பூஜை கூடை புறப்பட்டு, மறுநாள் மாசி 15ம் நாள் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கருப்பனார் பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ வரசக்தி விநாயகர், ஸ்ரீ கருப்பண்ணசாமி, பெரியாண்டிச்சி அம்மன், காட்டப்பன் சுவாமி, கன்னிமார், தைலியம்மன் கோவில் வீடு, சத்திரியர் குலதெய்வங்களுக்கு, ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தவத்திருவிழா நடைபெறும் இதில் 350 வீட்டு பங்காளிகள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கிடா, கோழி சுவாமிக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
கருப்பனார், பெரியாண்டிச்சி அம்மன் தெவத்திருவிழாவை, வீர வன்னிய குல சத்திரியர் பங்காளிகள் மற்றும் திருப்பணி குழுவினர் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
0Shares