புரட்சித்தலைவி அம்மாவின் 78 வது பிறந்த நாள் விழா

Loading

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கொப்பூர் ஊராட்சியில்  மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் 78 வது பிறந்த நாள் விழா மற்றும்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா :
திருவள்ளூர் பிப் 24 : திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கொப்பூர் ஊராட்சியில்  மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் 78 வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் பி.வி.ரமணா தலைமை தாங்கி பேசினார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்கள் கே.பழனி, சத்தியமூர்த்தி, விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் பி.வெங்கடேசன், மீனவர் அணி ஒன்றிய செயலாளர் லோகநாதன் மற்றும் கிளைச் செலாளர்கள் மூர்த்தி, பாலாஜி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஞானகுமார், மாவட்ட துணை செயலாளர் எல்.செந்தில்குமார், மாவட்ட பாசறை செயலாளர் நரேஷ்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கேபிஎம் எழிலரசன், மாவட்ட இளைஞரணி தலைவர் புங்கத்தூர் டி.தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
.
அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டி வீட்டிற்கு அனுப்ப வேண்டும். கொப்பூர் கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்ற அதிமுக அரசு பாடுபடும் என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இளைஞர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களையும், பெண்களுக்கு சேலையும் வழங்கினார். இதில்  ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஜி.உமாபதி,  எம்ஜிஆர். இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் ஆர்.ஆர்.சுரேஷ்குமார், கொப்பூர் கிளைக்கழக நிர்வாகிகள் நரேஷ்,சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares