திண்டல்மலைக்கோயிலில்207அடிமுருகன்சிலை

Loading

ஈரோடு
ஈரோடு திண்டல் மலைக்கோயிலில் ரூ.18 கோடியில் 207 அடி உயர முருகன் சிலை: அமைச்சர்கள் முத்துசாமி, சேகர்பாபு அடிக்கல் நாட்டினர்!
ஈரோடு மாவட்டம், திண்டல் அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயிலில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் 207 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர்கள் சு.முத்துசாமி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் (22.02.2026) அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தனர். முன்னதாக, 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இத்திருக்கோயிலில் ரூ.5 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் பல்வேறு சன்னதிகளுக்கு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் அமைச்சர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். 2025-26 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பின்படி, சென்னை ஐஐடி குழுவினரின் ஆய்வறிக்கை மற்றும் மாநில வல்லுநர் குழுவின் அனுமதியைப் பெற்று, இந்த பிரம்மாண்ட முருகன் சிலை அமைப்பதற்கான ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைபடம் உருவாக்கப்பட்டு தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, மொடக்குறிச்சி வட்டம் புஞ்சைலக்காபுரம் செண்பகமலை குமாரசாமி திருக்கோயிலில் நாள் ஒன்றுக்கு 25 பக்தர்களுக்கு உணவளிக்கும் ஒருவேளை அன்னதானத் திட்டத்தையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். தமிழகத்தில் தற்போது 14 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 770 கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் துரை இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் எஸ். Lகந்தசாமி, எம்.பி. அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கிடாச்சலம், இணை ஆணையர் ஏ.டி.பரஞ்சோதி உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
0Shares