முனீஸ்வரர் கோவிலில்வெள்ளிப் பொருட்கள் கொள்ளை

Loading

திருவள்ளூர் அருகே முனீஸ்வரர் கோவிலின்  பூட்டை உடைத்து ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் கொள்ளை : போலீசில் புகார் :

திருவள்ளூர் பிப் 23 : திருவள்ளூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மணவாளநகர் அடுத்த அரண்வாயல் பகுதியில் உள்ளது ஸ்ரீ பாலமுனிஸ்வரர் ஆலயம்.  கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள இந்த கோயில் குலதெய்வ கோயிலாக கருதப்படுவதால் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர்  வழிபட்டு வருகின்றனர். இந்த ஆலயத்தின் ஸ்தாபகராக நரேஷ் என்கிற தீபன் ராஜ் (30) என்பவர் இருந்து கொண்டு கோயிலை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இரவு பணியாளர்கள் எப்பொழுதும் போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இன்று காலை வழக்கம்போல் ஆலயத்தின் நடையை திறக்கச் சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணம் திருடப்பட்டிருந்ததை பார்த்ததும் செல்போன் மூலம் ஆலய ஸ்தாபகர் நரேஷ் என்கிற தீபன்ராஜூக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அவர் ஆலயத்திற்கு வந்து பார்த்தபோது ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 25 லட்சம் மதிப்புள்ள ஒரு பெரிய வெள்ளி கிரீடம், திருவாச்சி, கால் பாதம், சூலம், ஈட்டிக்கோல், உடல் கவசம், காமாட்சி அம்மன் விளக்கு, வெள்ளித் தட்டு, பஞ்ச பாத்திரம், ஸ்பூன், விநாயகர் கிரீடம், சாப்பாட்டு கிண்ணம், ராஜகணபதி கண்மலர் மற்றும் விபூதி பட்டை ஆகிய வெள்ளிப் பொருட்களையும், 3 கிராம் அங்காள பரமேஸ்வரி அம்மன் தாலி பொட்டு, ரொக்க பணம் ரூ. 25 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்துள்ளது.
மேலும் மர்ம நபர்கள் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா என்வி ஆர் மற்றும் ஹார்டு டிஸ்க் ஆகியவற்றையும் எடுத்து சென்றுள்ளனர். இந்த திருட்டு குறித்து நரேஷ் என்கிற தீபன்ராஜ் செவ்வாபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார்  வழக்கு பதிவு செய்து கோயில் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், தங்க நகை, ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றவர்களை தேடி வருகின்றனர்.
0Shares