திருவள்ளூரில் ஊரக வளர்ச்சிதிட்ட பணிகள்ஆய்வு
![]()
திருவள்ளூரில் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் :
திருவள்ளூர் பிப் 23 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டு பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் உலக தாய்மொழி நாள் உறுதி மொழியை அரசு அலுவலர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார்,செ யற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) க.தணிகாசலம், (உதவி இயக்குநர் ஊராட்சிகள் (ம) தணிக்கை கிழக்கு) பஞ்சு,(உதவி இயக்குநர் ஊராட்சிகள் (ம) தணிக்கை மத்தியம்) யுவராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

