கலைஞர் ரத்தம் சிந்திய புதுச்சேரி திராவிட மண்

Loading

புதுச்சேரி பிப்-21
கலைஞர் ரத்தம் சிந்திய புதுச்சேரி திராவிட மண்ணை
காக்கும் பொறுப்பு திமுகவுக்கு மட்டுமே உண்டு
ஜெகத்ரட்சகன் எம்.பி., பரபரப்பு பேச்சு 
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி தேர்தல் குறித்த ஆலோசனைகள் வழங்க அறிவுறுத்தியதின்பேரில், இன்று முதல் கட்டமாக காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, உப்பளம் ஆகிய தொகுதிகளின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று  நடைபெற்றது. இதில்
முத்தமிழறிஞர் கலைஞர் ரத்தம் சிந்திய புதுச்சேரி திராவிட மண்ணை காக்கும் பொறுப்பு திமுகவுக்கு மட்டுமே உண்டு என்றும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே பெற்றுத்தர முடியும் என்று திமுக கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., தெரிவித்தார்.
கூட்டத்துக்கு மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா தலைமை வகித்தார். உப்பளம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கழக மாநில துணை அமைப்பாளர் அவர்கள் முன்னிலை வகித்து தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சக்திவேல் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர், கழக கொள்கை பரப்புச் செயலாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசுகையில், தமிழகத்தில் பொற்கால ஆட்சி ஐந்து ஆண்டு காலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஆட்சி தலைவர் ஸ்டாலின் நடத்துகிறார். அவரின் திட்டங்களை இந்தியா மட்டுமல்ல உலகளவில் வியந்து பாராட்டுகின்றனர்.
இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்கும் தகுதி ஸ்டாலினுக்குதான் உண்டு என மணிசங்கர் அய்யர் சொல்கிறார். இக்கருத்தை பல மாநிலத் தலைவர்களும் சொல்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள மக்கள் வியந்து போற்றி பாராட்டுகின்றனர்.
தமிழக பொற்கால ஆட்சி புதுச்சேரிக்கு கொண்டு வரவேண்டும். கடந்த ஐந்து ஆண்டு இரட்டை என்ஜின் ஆட்சி என்று சொன்னார்கள். ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள இரு என்ஜின்களும் கெட்டு போய் விட்டன. பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு கருப்பு பணத்தை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் தருவதாகக்கூறி 15 பைசாக்கூட தரவில்லை ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாகக்கூறி தரவில்லை. புதுச்சேரி என்ஜின் பற்றி சொல்ல வேண்டியதில்லை. நிசப்தமான ஆட்சி நடக்கிறது. மக்களால் தேர்வான முதல் அமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் இல்லை. முதல் அமைச்சர் நாற்காலி கெட்டுபோனால் டெல்லி அனுமதி தந்தால்தான் சரி செய்ய முடியும்.
தமிழகத்தில் ஆளுநர் வைத்து பார்த்தார்கள், அரசை ஸ்தம்பித்து வைக்க பார்த்தார்கள். தமிழக முதல்வர் சிங்கக்குட்டியாக செயல்பட்டார். தொட்டு பார்க்க முடியவில்லை. எல்லா திட்டத்தையும் மறுத்தார்கள். மத்திய அரசு ஒரு பைசா தரவில்லை. நாம் தரும் பணத்தை திருப்பி தரவில்லை. அதே நேரத்தில் பணம் தராவிட்டாலும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 5 ஆயிரம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தந்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை தேர்தல் வருவதால் மூன்று மாதங்களுக்கு முன்பணமாக தமிழகத்தில் தந்துள்ளார். தேர்தல் வரபோகிறது. பிரதமர் வரபோகிறார். பத்தாயிரம் ரூபாய் தருவதாக சொல்வார்கள். அது பத்தாது. புதுச்சேரிக்கு குடும்பத்துக்கு ரூ. 25 ஆயிரம் தரவேண்டும் என்று கேளுங்கள். பீகாரில் பத்து ஆயிரம் ரூபாய் தந்துள்ளார்கள். தேர்தலுக்காக, வாக்கு போட லஞ்சம் கொடுத்தனர்.
லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலை, ஏஎப்டி ஆலை மூடி கிடப்பதை ஏன் திறக்கவில்லை. ஒன்றியத்தில் ஆட்சி செயபவர்கள் பாரதி பாடல்களை மட்டும் பாடுவார்கள் ஆனால் தமிழர்களை பிடிக்காது. புதுச்சேரியில் மாநில அந்தஸ்து கேட்டோம். இரட்டை என்ஜின் ஆட்சியில் ஏன் தரவில்லை. என்ன வளம் இல்லை – ஏன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவில்லை.
பொதுத்துறை நிறுவனங்கள் மூடியுள்ளன. சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது- குழந்தைகளை வெளியே அனுப்ப பயமாக இருக்கிறது. 9 வயது குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. போலி மருந்து, காலாவதியான மருந்து இங்கு விநியோகிகப்பட்டு நடவடிக்கையே எடுக்கவில்லை. இந்த நிலை மாற வேண்டும். மாநில அந்தஸ்து பெற ஸ்டாலினால்தான் முடியும். அற்புதமான புதுச்சேரியை செம்மையாக்குவார். கருணாநிதி ரத்தம் சிந்திய திராவிட மண். இதை காக்கும் பொறுப்பு திமுகவுக்கு உண்டு.  திட்டங்களை கொண்டு வர திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரியில் தேவை என்றார்.
கூட்டத்தில் அவைத்தலைவர் எஸ்பி சிவக்குமார், செந்தில்குமார், சம்பத், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், பொதுக்குழு  உறுப்பினர்கள் கோபால், தங்கவேலு, செந்தில்குமார், தொகுதி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
0Shares