தமிழகம் போதைப்பொருள் &சட்டம் ஒழுங்கு சீர்கேடு

Loading

தமிழகம்
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: ஈரோட்டில் பாஜக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திராவிட முன்னேற்றக் கழக அரசைக் கண்டித்தும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைச் சரிவரக் கையாளாமல் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதைக் கண்டித்தும், பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணியின் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோடு கனிராவுத்தர் குளம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசின் மெத்தனப் போக்கினால் தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் பெருகி வருவதாகவும், இது இளைஞர்களின் வாழ்வை அழிப்பதாகவும் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பாஜக மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் S.M.செந்தில், ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் S.M.செந்தில்குமார், ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் ச.யுவராஜ், ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் சஞ்சீவ்குமார் மற்றும் பெரியசேமூர் மண்டல் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் அதிமுக சார்பில் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் K.V. ராமலிங்கம் மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர் K.C.கருப்பணன் ஆகியோரும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விடியல் சேகர், யுவராஜ்  விஜய்குமார், ஆகியோரும் பங்கேற்றனர். மேலும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த தம்பிதுரை, அமமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் வெங்கடேஷ் மற்றும் முகமது ராஜா ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
0Shares