மாபெரும் சபைதனில்” என்ற தலைப்பில் கருத்தரங்கு
![]()
திருவள்ளூர் 5 வது புத்தகத் திருவிழாவில் உலக தமிழ் சங்கம் துணை தலைவரும் இயக்குநருமான இ.சா.பர்வீன் சுல்தானா அவர்களின் “மாபெரும் சபைதனில்” என்ற தலைப்பில் கருத்தரங்கு :
திருவள்ளூர் பிப் 21 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக காலி மைதானத்தில் (வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில்) மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 5வது திருவள்ளுர் புத்தகத் திருவிழா-2026யில் உலக தமிழ் சங்கம் துணை தலைவரும் இயக்குநருமான இ.சா.பர்வீன் சுல்தானா “மாபெரும் சபைதனில்” மற்றும் திரை பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி அவர்களின் “அகத்தின் அழகு” ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது.
இப்பட்டிமன்றதை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித் துணை ஆட்சியர் பாலமுருகன், மாவட்ட நூலக அலுவலர் சரஸ்வதி, உதவி திட்ட இயக்குநர் (கணக்கு (ம)நிர்வாகம்) ஜெய்சங்கர் மற்றும் திரளான பொதுமக்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக காலி மைதானத்தில் (வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில்) மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 5வது திருவள்ளூர் புத்தகத் திருவிழா-2026யில் உலக தமிழ் சங்கம் துணை தலைவரும் இயக்குநருமான இ.சா.பர்வீன் சுல்தானா மற்றும் திரை பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி அவர்கள் ஆகியோரை வரவேற்று தனித் துணை ஆட்சியர் பாலமுருகன் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
முன்னதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக காலி மைதானத்தில் (வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில்) மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 5 வது திருவள்ளூர் புத்தகத் திருவிழா-2026யினை திரளான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் புத்தக கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.

