தமிழ்நாடுவருவாய்கிராமஊழியர்சங்கத்தினர்போராட்டம்

Loading

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் சார்பில் போராட்டம்

சேலம் பிப்ரவரி 20

சேலம் மாவட்டம் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கிராம ஊழியர் சங்கம் 90/74 மாநில மையம் அறிவிப்பின்படி கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டி தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 9 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் வாழ்த்துரை வழங்க தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தநாரி, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மோகன்ராஜ், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர்
அருள்பிரகாசம் கலந்து கொண்டனர். மேலும் வட்டத் தலைவர் எஸ்.சரவணன், செயலாளர்
எம்.சரவணன் பொருளாளர் இளவேந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும் சங்க துணைத் தலைவர்கள் இணைச்செயலாளர்,
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக  இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

0Shares