சேலம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் மாசி திருவிழா
![]()
சேலம் வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில் மாசி திருவிழா!
சேலம் வீரபாண்டி மில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில் மாசி மாத திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.
அருள்மிகு ஸ்ரீ தௌபதி அம்மன் திருக்கோயில் மாசி திருவிழா மாசி அமாவாசை சிவன் ராத்திரியன்று, வீரபாண்டியில், அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருவீதி உலா, கரகம் எடுத்தல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது, மறுநாள் சீரகபாடியில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஊர்வலம், கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மறுநாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், பொங்கல் வைத்தல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது, ஸ்ரீ திரௌபதி அம்மன் மாசி திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தினமும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இக்கோயில்,200 ஆண்டு காலமாக மூன்று தலைக்கட்டுகளாக மூதாதையர் வழியில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. பங்காளிகள் மாமன் மைத்துனர் ஊர் பொதுமக்கள் திரளாக இதில் கலந்துகொண்டுஅருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன்அருள் பெற்று சென்றனர்.

