திமுகவின் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்

Loading

ஈரோடு
திமுகவின் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்: ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் எஸ்.எம்.செந்தில் ஆவேசம் 
திமுக அரசின் ஊழல் மற்றும் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சார்பில் காசிபாளையம் பகுதியில் மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தலின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களின் ஆதரவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.செந்தில் கலந்துகொண்டு ஆவேசமாக உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதை கடுமையாகச் சாடினார். கோவை, திருப்பூர் போன்ற நகரங்களை விட ஈரோட்டில் வரி அதிகமாக உள்ளது என்றும், அடிப்படை வசதிகளான சாலை, தெருவிளக்கு மற்றும் வடிகால் பணிகளைச் செய்யத் தவறிய மாநகராட்சி நிர்வாகம் வரி வசூலிப்பதில் மட்டும் குறியாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
தமிழக அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு வந்த பிறகு மாநிலத்தின் கடன் 10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி தொழில்முனைவோர் அண்டை மாநிலங்களுக்குத் தப்பிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மாநகராட்சி தனது வரி உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால் சொத்துக்களை மாநகராட்சியிடமே ஒப்படைக்கும் போராட்டத்தை பாஜக முன்னெடுக்கும் என எச்சரித்த அவர், பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் “இது வரியா அல்லது வாடகையா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
அடுத்த 10 நாட்களில் ஈரோடு தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளில் 360 இடங்களில் இத்தகைய பிரச்சாரங்கள் நடைபெறும் என்றும், திமுகவின் ஊழல் ஆட்சியை வீழ்த்தி எடப்பாடி பழனிசாமி அவர்களை மீண்டும் முதலமைச்சராக்க மக்கள் உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்வில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா, தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு மாவட்ட தலைவர் விஜயகுமார்,
ஈரோடு மேற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன்,
கொல்லம்பாளையம் பகுதி செயலாளர் ராஜேந்திரன்,
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பகுதி செயலாளர்கள் கோவிந்தராஜன்,
ஈஸ்வரமூர்த்தி,
கணேசமூர்த்தி,
மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பகுதி செயலாளர்
தங்கமுத்து,பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜு,
மாவட்ட தலைவர்
பிரபு, மாநில துணை தலைவர்
பரமசிவம் மற்றும் ஏராளமான பாஜக தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
0Shares