மெட்டில்பட்டிஅரசுபள்ளிமாணவர்களுக்குடெலஸ்கோப்

Loading

தூத்துக்குடி
மெட்டில்பட்டி
அரசு பள்ளி மாணவர்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு டெலஸ்கோப் மூலம் தொலைதூர பொருட்களை பார்வையிடுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களில் அஸ்ட்ரோ கிளப் அமைக்கப்பட்டு அதன் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வானவியல் குறித்த விழிப்புணர்வு பயிற்சிகளை வழங்கி வருகிறது.
மெட்டில்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த வானவியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காந்திராஜ் தலைமை வகித்தார்.
அறிவியல் ஆசிரியர் சாந்தி, மக்கள் நல பணியாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்துமுருகன் கலந்து கொண்டு டெலஸ்கோப் மூலம் தொலைதூரப் பொருட்களை பார்வையிடுதல்,டெலஸ்கோப் கையாளுதல்,
வானவியல் குறித்து பயிற்சி அளித்தார்.
இதில் ஏராளமான மாணவர்கள் டெலஸ்கோப் மூலம் தொலைதூர பொருட்களை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.அனைவருக்கும் நிறமாலை குறித்த விழிப்புணர்வு அட்டைகளும்,வானவியல் குறித்த ஆண்டு செயல்திட்ட காலண்டர் வழங்கப்பட்டது.
இதில் ஆசிரியர்கள் நாகலட்சுமி,ஜெயா மேரி, டொன்பாஸ்கோ, சண்முகத்தாய்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares