முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்க கட்டிடபணி

Loading

பூவலம்பேடு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்க கட்டிட கட்டுமான பணி, தரை பால கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் பிப் 18 : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகிய துறைகள் சார்பில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்க கட்டட கட்டுமான பணிகளையும், தரை பால கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், பூவலம்பேடு ஊராட்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகிய துறைகள் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்க கட்டிட கட்டுமான பணிகளையும், மங்களபுரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தரை பால கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உத்தரவிட்டார்.
இதில் உதவி செயற்பொறியாளர் கஜலட்சுமி, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், சந்திரசேகர் உதவி பொறியாளர்கள் குருபிரசாத், பத்மநாபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares