தேசியஊரகதிட்டத்தில்வேலைவழங்காததால்முற்றுகை

Loading

சோமணஞ்சேரி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை வழங்காததால் வேலை வழங்க கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை :

திருவள்ளூர் பிப் 18 : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் சோமணஞ்சேரி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தில் வேலை வழங்க மறுத்து வருவதால் நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.இந்த ஊராட்சியில் அடங்கிய மற்ற கிராமங்களுக்கு பணி வழங்கி வருவதாகவும் , ஆண்டு முடியும் தருவாயில் வெறும் 20 நாட்கள் பணிகூட வழங்காமல் ஊராட்சி நிர்வாகம் வஞ்சித்து வருவதால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து  வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்ததை எடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
0Shares