அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டம்

Loading

திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 14-வது நாளாக தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம் :
திருவள்ளூர் பிப் 18 : காலிப்பணியிடங்களை நிரப்புதல் மற்றும் காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு,  அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை  உதவியாளருக்கு நிகரான ஊதியமும், சமையல் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலையினான  ஊதியம் என காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.  அரசு காலிப் பணியிடங்களை நிரப்பும்போது 10 ஆண்டு பணி முடிந்து தகுதியான சத்துணவு அங்கன்வாடி  ஊழியர்களை அரசு பணியில் அமர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  அங்கன்வாடி  பணியாளர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
14-வது நாளாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தின்போது கருப்பு உடை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வீட்டில் இருக்கும் மகளிர்க்கு ரூ. 5 ஆயிரம் வழங்கும் அரசு, கோரிக்கைகளுக்காக 14 நாட்களாக போராடும் தங்களை கண்டுகொள்ளாதது ஏன் என்றும், மகளிர்க்கு ரூ. 5 ஆயிரம் என்றால் நாங்கள் மகளிர் இல்லையா என்றும் சூசகமாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததை நிறைவேற்ற உடனடியாக மாநில நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காணவேண்டும் என்றும் இல்லையேல் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கியது போல் தங்களுக்கும் ஒதுக்க வேண்டுமென்றால் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், 2021தேர்தலில் திமுகவை வெற்றி பெற பாடுபட்டது போல் நீங்கள் வெற்றி பெறாமல் இருக்கவும் எங்களால் பாடுபட முடியும் என்றும் சூசசகமாக அரசை எச்சரித்தனர்.
0Shares