16 வயது சிறுமியை கடத்தி பாலியல்22 ஆண்டுகள்சிறை

Loading

அம்பத்தூர் அடுத்த பாடியில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு :

திருவள்ளூர் பிப் 18 : திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 2024 ஆண்டு மாயமானதாக  சென்னை ஜே.ஜே. நகர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். பின் இரு தினங்களுக்கு பின் அந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பாலியல் தொல்லை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

பின் நடந்த விசாரணையில் சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை செய்தது பாடி பகுதியைச் சேர்ந்த மகாத், (27) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த இளைஞரை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜராகி வாதாடினார். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சிறுமியை கடத்தி சென்றதற்காக 10 ஆண்டுகளும் பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 10 ஆண்டுகளும் மிரட்டிய குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் என 22 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உமாமகேஸ்வரி சிறை தண்டனையும், 45,000 ரூபாய் அபாராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
0Shares