ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம்
![]()
பூண்டி, எல்லாபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் பயனாளிகளுக்கு வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார் :
திருவள்ளூர் பிப் 17 : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி, எல்லாபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பயனாளிகளை நேரில் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டிற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக 5100 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கீடு மற்றும் திட்ட செயலாக்கத்தின் படி ஊராட்சி அளவிலான குழுவின் மூலம் தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பெயர் பட்டியல் ஒப்புதல் பெறும் பொருட்டு திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் வருகின்ற 17.02.2026 அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பூண்டி ஊராட்சி ஒன்றியம், பூண்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குவது தொடர்பாக பயனாளிகளை நேரில் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம், செஞ்சியகரம் ஊராட்சி ஒடக்கண்டிகை இருளர் குடியிருப்பு, லச்சிவாக்கம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் பயனாளிகளை நேரில் சந்தித்தார். இறுதியாக திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், கரிக்கலவாக்கம் ஊராட்சி, கீழானூர் ஊராட்சி, தலக்காஞ்சேரி ஊராட்சி ஆகிய பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் பயனாளிகளை நேரில் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார்.
இதில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள் (ம) தணிக்கை) (திருவள்ளூர் கிழக்கு) சு.பஞ்சு, உதவி செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) கோவேந்தன், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிசேகர், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், ஜானகி, பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சுலோச்சனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

