இன்றைய ராசிபலன் – 16-02-2026
![]()
மேஷம்:
அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சி களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணைவழி உறவி னர்களால் திடீர் செலவுகள் ஏற்படும். இளைய சகோதர வகையில் காரியங்கள் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும்..
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை.
ரிஷபம்:
குடும்பம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் பொறுமை மிக அவசியம். குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரனையாக நடந்துகொள்ளவும். கணவன் – மனைவிக்கி டையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப் படும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
மிதுனம்:
எதிலும் ஒரு பிடிப்பில்லாத மனநிலை ஏற்படக்கூடும். வழிபாட்டின் மூலம் தெளிவு பெற முயற்சிக்கவும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கக்கூடும். வாழ்க்கைத்துணை முரண்டு பிடித்தாலும் கடுமை காட்டாமல் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது தாமதமாகும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் வீண்பிரச்னைகள் ஏற்படும்.
கடகம்:
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் குடும்பத்தில் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக் கூடும்.
சிம்மம்:
மனதில் நம்பிக்கையும் உற்சாககும் நிறைந்திருக்கும். வீட்டிலும் வெளியிலும் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் லாபம் வழக்கம்போல் இருக்கும். எதிர்பார்த்த வாடிக்கையாளர்களும் வந்துசேர்வார்கள். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
கன்னி:
புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். கணவன் மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் இறைவழிபாட்டில் ஈடுபடும் வாய்ப்பு வரும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
துலாம்:
வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகள் தவிர்க்கவும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் குறைவாகவே இருக்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் வீண்விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்:
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் கடன் வாங்காமல் சமாளித்துவிட முடியும். பிள்ளைகள் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் பணியாளர்கள் முரண்டு பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படக்கூடும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருக்கும் நண்பர்களின் வருகை உற்சாகம் தருவதாக இருக்கும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
தனுசு:
உடன் பிறந்தவர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். நீண்டநாள்களாக பிள்ளைகள் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தந்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத் துச் செல்லவும். வியபாரத்தில் பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வத் திருப்பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.
மகரம்:
எந்த விஷயத்திலும் பொறுமையுடன் சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். குடும்பத்து உறவினர்களுடன் வீண்விவாதம் செய்யாமல் இருப்பதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும். சகோதரர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாகும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும்.
கும்பம்:
உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவை களை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும் என்பதால், கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருப்பார். பணிச்சுமை அதிகரித்தாலும் சோர்ந்து விடாமல் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் முயற்சி அனுகூலமாக முடியும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் ஏற்படும்.
மீனம்:
பணவரவு அதிகரிக்க வாய்ப்புண்டு. நினைத்த காரியங்களை நினைத்தபடி முடித்துக்காட்டுவீர்கள். முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் கலகலப்பும் நிறைந்திருக்கும். நண்பர்கள் வழியில் நன்மைகள் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகக் கிடைக்கும் பணியாளர்களும் நல்லமுறையில் பணி செய்து லாபம் அதிகரிப்பர்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணவரவு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அசதியும் சோர்வும் அதிகரிக்கும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நினைத்த காரியங்கள் நல்லபடி முடியும்.

