நண்பனுக்குள்தகராறு3 பேர்சேர்ந்து கொலையில் தீர்ப்பு

Loading

பெரியபாளையத்தில் நண்பனுக்குள் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சேர்ந்து நண்பனை கொலை செய்த வழக்கில் 2 பேர் தலைமறைவானதால் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு : 
திருவள்ளூர் பிப் 16 : திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசந்தம் எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர்.  அதில் மஞ்சுத், தேவஜித், கோகுல், மோனு, ஆகியோர்  கடந்த 2019 மார்ச் மாதம் 13-ஆம் தேதி  பெரியபாளையத்தில் உள்ள ஆற்காடு பிரியாணி ஃபாஸ்ட் ஃபுட் சென்டர் எதிரில் மது அருந்திய போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மஞ்சுத், தேவஜித்,  மோனு ஆகிய மூன்று பேரும் கோகுலை கண்முடித்தனமாக தாக்கியதில் கோகுல் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இந்த கொலை வழக்கில் 3 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் விசாரணையின் போது மூன்று குற்றவாளிகளும் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில் இதில் பெரியபாளையம் போலீசார் தேவஜித்  என்பவரை மட்டும் கைது செய்தனர்.
மற்ற இரண்டு நபர்களையும் தேடி வரும் நிலையில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இதில் தேவஜித் குற்றவாளி மீது மட்டும் நீதிமன்ற வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில்,  இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்படி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 1000  ரூபாய் அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
0Shares