திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

பூண்டி மற்றும் கடம்பத்தூரில் 125 நாள் வேலை உறுதி திட்டத்தில் குளறுபடிகளை கண்டுகொள்ளாத திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் : முன்னாள் அமைச்சர் பி வி ரமணா மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்பு :
திருவள்ளூர் பிப் 15 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் 125 நாள் வேலை உறுதி திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகளை கண்டுகொள்ளாத திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் ராமஞ்சேரி எஸ்.மாதவன், பி.எம்.பிரசாத்  ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி வி ரமணா பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
திமுக ஆட்சியில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்த நிலையில் தற்போது 125 நாள் வேலை உறுதி திட்டத்தில் மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டை பொது மக்களிடம் எடுத்துச் சொல்லி வருவது குறித்து எடுத்துரைத்தார். இதனையடுத்து திமுக அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள  பாஜக, பாமக, புரட்சி பாரதம், அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில்  மாவட்ட துணை செயலாளர் எல்.செந்தில்குமார்,  மாவட்ட இளைஞர் அணி தலைவர் புங்கத்தூர் டி.தேவா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜி,  மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் வள்ளியம்மா பேட்டை இ.சீனிவாசன், மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் எஸ்.ஞானக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.நேசன், திருவள்ளூர் நகர செயலாளர் ஜி.கந்தசாமி, அம்மா பேரவை நகர செயலாளர் ஜோதி,பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பாலயோகி,மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய, பேரூர் நகர நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அதேபோல் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் 125 நாள் வேலை உறுதி திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகளை கண்டுகொள்ளாத திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் சூரகாபுரம் எஸ்.சுதாகர் , சிற்றம் ஜெ.சீனிவாசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி வி ரமணா பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
0Shares