திருவள்ளூரில் 5 வது புத்தகத் திருவிழா

Loading

திருவள்ளூரில் 5 வது புத்தகத் திருவிழா : சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து பார்வையிட்டார் :
திருவள்ளூர் பிப் 15 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக காலி மைதானத்தில் (ஆர்டிஓ அலுவலகம் எதிரில்) மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 5வது திருவள்ளூர் புத்தகத் திருவிழா-2026 யினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து பார்வையிட்டு பள்ளி மாணவர்களிடையே உரையாற்றினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 5 – வது புத்தக திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. மாணவர்களிடையே புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் இப்புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. மாணவர்கள் நீங்கள் நிறைய புத்தகங்களை படித்து அறிவியல் விண்வெளி ஆராய்ச்சி செயற்கை நுண்ணறிவு ஆகியவைகள் தொடர்பாக அறிந்து புரிந்து உலகின் பல்வேறு இடங்களுக்க சென்று வாழ்க்கையில் சிறப்பான உச்சங்களை அடைய வேண்டும்.
கூகுள் நிறுவன செயல் அலுவலர் சுந்தர் பிச்சை, இஸ்ரோ, விஞ்ஞானிகள்  மயில்சாமி அண்ணாதுரை, வினிதா முத்தையா, முனைவர்.சுப்பையா, மு.வீரமுத்து வேல், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.எ.பி.ஜே. அப்துல் கலாம் போன்ற அறிவியல் மேதைகளை போல  நீங்களும் வாழ்க்கையில் வெற்றிபெற புத்தகங்களை நன்கு பயின்று அதன் பொருள்களை உள்வாங்கி வாழ்க்கையில் சிறப்பான உச்சம் பெற வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்து பாராட்டி சால்வை அணிவித்து வழங்கி கௌரவித்தார். மேலும்,சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் அமைச்சர் 115 மகளிருக்கு தலா ரூ.5025 மதிப்பீட்டில் மொத்தம் ரூ.5.80 லட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), துரைசந்திரசேகர் (பொன்னேரி), மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார்,  தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் எஸ்.வைரவன், மாவட்ட நூலக அலுவலர் சரஸ்வதி, உதவி ஆணையர் (கலால்) கணேசன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் பாலமுருகன், வருவாய் கோட்டாச்சியர்கள் எஸ்.ரவிச்சந்திரன் (திருவள்ளூர்), என்.எம்.கனிமொழி (திருத்தணி), துணை ஆட்சியர் பயிற்சி சண்முக பீரித்தா, மற்றும் பல்துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares